அணையின் மதகு திறந்தபோது

அணையின் மதகு திறந்தபோது

விடிய விடிய
பெய்த மழை

விடிந்த பின்னும்
சாரலாய்
வீசி கொண்டிருக்கிறது

பெய்த மழையில்
சேர்ந்த வெள்ளம்
உற்சாகமாய்
ஓடி வர

அதனை அடைக்க
நினைத்த
அணையின் மதகு

இதன் வேகம்
கண்டு பயந்து
வாய் பிளக்க

வெற்றி களிப்புடன்
வெள்ளை சிரிப்பாய்
ஹோவென பெரும்
கூச்சலுடன்

அதன் பிளந்த
வாய்
வழியே வெளியே
வந்து

மேலிருந்து கீழே
விழும் அழகை
காண


அணையை ஒட்டி
ஆயிரக்கணக்கானோர்

ஆரவாரத்துடன்
அதனை விட
அதிகமாக கூச்சலிட்டு
வேடிக்கை பார்த்தனர்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Oct-21, 1:34 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 71

மேலே