பருவநிலை மாறுபாடு கருத்தரங்கு
பருவநிலை மாறுபாடு கருத்தரங்கு
வெண்மை புகையில்
பச்சை போர்வையின்
உள்ளுக்குள்
வைத்திருக்கும் ஆயிரம்
இரகசியங்கள்
இயற்கையின்
மிச்சங்கள்
பொத்தி வைத்து
பாதுகாக்கின்றது
இயற்கை
ஒவ்வொன்றாய்
மனிதன் கண்ணில்
பட்டு களவாட
பட்டு விடுகிறது
தன்னை ஞானி
என்று சொல்பவன்
வாழ்க்கைக்கு வழி
காட்டுவதாய்
சொல்லி
இயற்கை வனத்துக்குள்
மாடமாளிகை
கட்டி கொள்கிறான்
விலங்குகளின் வழி
தடத்தை மறைத்து
சுவர் கட்டி விடுகிறான்
காசு பணம்
புழங்கி வாழ்பவன்
காட்டுக்குள் காட்டேஜ்
கட்டுகிறான் நன்மைகளை
சிறிதளவும், தீயவைகளை
அதிகமும் செய்து
காட்டு வாழ்க்கையை
நாசமாக்குகிறான்
அறிவியலின் வளர்ச்சி
சொல்லி அரசாங்கம்
கூட
ஆராய்ச்சி என்ற
பெயரில்
காட்டை வழித்து
ஏதேதோ கட்டி
கொள்கிறது
இத்தனையும் மெளனமாய்
பார்த்து சத்தமில்லாமல்
கண்ணீர் வடிக்கிறது
இயற்கை என்னும்
வனக்காடு
இன்று கூட
உலக நாடுகள்
ஒன்று கூடி
பருவ நிலை மாறுபாடுகளை
பற்றி விவாதம்
நடத்துகிறதாம்..!