பெண்ணும் - மண்ணும் - மரமும்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

பெண்ணின் அகத்தினுள் அறையை வைத்தே கருப்பை என்றான் இறைவன்
மண்ணில் உயிர்கள் பிறந்திட குறியினுள் விதையை வைத்தே உறவால்
பிண்ணியே உட்செலுத்த இன்பம் பொங்கி மயங்கச் செய்தான் இறைவன்
அண்ட அணுக்கள் எதிர்க்க அதனை வென்ற விந்தே குழந்தையாய் ---- (1)

விதையது எங்கோ பிறந்து எதுவோ அதனைக் உண்டு எச்சமிட
சிதையா விதையும் மண்ணில் பதியம் போட்டே வளர்ந்து முளைத்திட
அதிசய மரமென அதனை யாவரும் ஆண்டவனாய் நினைந்து கும்பிட
புதிய பிறப்பை அதுவும் எடுத்திட பூமித்தாய் கருவினை சுமந்தாளே ---- (2)

யாரது தந்தை மரத்திற்கு எப்படி உணவும் அதற்கு கிடைக்குது
நீரதை மரமும் குடிக்குது அதனின் உடலில் நீரே ஓடுது
காரினை உருவாக்கி உலகிற்கு தருகுது கடுவெம்மை காத்தபடி நிற்குது
பாரினை தினமும் காக்குது பண்பான பணியை மட்டுமே செய்யுது ---- (3)

மக்கிடும் மரமது உரமாக மறுபடியும் பிறந்திடும் உலகில் உயர்வாக
அக்கறை கொண்டே காத்திட்டால் எங்கும் அற்புதம் பெருகிடும் எழிலாக
உக்கிரம் மரத்திற்கு வந்தது என்றால் உரசியே நெருப்பை தந்திடுமே
அக்கிரமம் அதிகமாய் ஆகாது இருந்தால் அகிலமும் அமைதியாய் இருந்திடுமே ---- (4)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Nov-21, 6:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 97

மேலே