காடு

அறிவுடை மாந்தர் வந்து
அழித்திடாப் பாகம் காடு!
செறிவுடன் பசுமை பரவி,
செடிகொடி மரங்கள் ஓடு
சிறுவுயிர் முதல்பே ரானைச்
சேர்ந்துதான் வாழும் வீடு!
இறந்திடா இயற்கை தன்னை
இயம்பிடும் இன்ன தென்றே!

எழுதியவர் : அ. முகிலன் (5-Nov-21, 6:42 pm)
சேர்த்தது : அ முகிலன்
பார்வை : 654

மேலே