கணக்காற்றுப்படை

அவளைக் காணாது அலைகளித்த என்மனதை
ஆற்றுவதற்கு எவருமின்றி கலங்கித்தவித்த நாட்களுண்டு...

எண்ணக்குறையால் பிண்ணிக்கிடந்த வண்ணக்கனவுகளை அள்ளிக்கொண்டு
திண்ணம்கூட்டி விண்ணைநோக்கி திளைத்தவாறே துள்ளிப்பறந்தேன்...

காரிகையாள் கயல்விழியால் சென்றவெனைக் கண்டமையால்
தூரிகையால் துளைத்தெடுத்தாள் அவளகத்தே கொண்டமையால்...

அவளருகே சிறகடித்த அன்னமொன்றும் அறியாவண்ணம்
கவணெரிந்த கல்போலே கண்ணீரால் வீழ்வித்தாள்...

மோகத்தீவாய்க் கூடித்தழுவிய காலனவன் எல்லைகடந்து
மேகக்கூட்டில் ஓடியொழிந்தேன் ஓய்வுற்றப் பயணமதில்...

அவளுக்குத் தூதாக அன்னமொன்று என்றிருக்க
சிவலோகத்திலிருந்து தூதனுப்ப எவருமிலர் எக்காலத்தும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (2-Nov-21, 8:54 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 44

மேலே