நாடுங்கள்
கட்சித் தொண்டர்கள் இருவர்
காலை நடை பயணத்தில்
என்ன வெங்குட்டு, தலைவர்
வெளி நாட்டு பயணம் போகிறாரமே !
என்ன , சம்மர் பயணமா ? என்றார்
அதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை
சம்மன் தான் காரணமென்றார் அடுத்தவர்.
துன்பம் வரும்போது—அதனைத்
துடைப்பதற்கு சிரிப்பை அழைத்து
இன்னலை போக்குங்கள்,
சிரிக்கத் தெரியாதவர்களுக்கு
இந்த உலகம் பகலிலும்
இருட்டாகத்தான் தெரியும்
நகைச்சுவையை நாடுங்கள்