என் பெயர் பசி

வணக்கம் மாணவர்களே
######
வணக்கம் ஐயா
#######
வாழ்த்துக்கள். அமருங்கள். இன்று இந்த வகுப்புக்கு புதிதாக வந்த மாணவன் கையை உயர்த்தவும். (ஒரு பையன் கையை உயர்த்தி எழுந்து நிற்கிறான்) உன் பெயர் என்ன தம்பி.
#########
ஐயா என் பெயர் 'பசி'.
######
என்னது 'பசி'யா?
######
என்னடா இந்தப் பேரை உனக்கு உன் பெற்றோர் உனக்கு வைத்திருக்கிறார்கள்? எதாவது வேண்டுதலா?
#######
வேண்டுதல் இல்லீங்க ஐயா. இந்த வகுப்பில் என்னைத் தவிர மற்ற மாணவர்களின் பெயர்கள் எந்த மொழிப் பெயர்கள் ஐயா?
#########
உன் பெயரைத் தவிர மற்ற மாணவர்களின் பெயர்கள் அனைத்தும் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்கள்.
########
சரி இந்த மாணவர்களில் எத்தனை பேரின் தாய்மொழி இந்தி அல்லது சமஸ்கிருதத்தை தாய்மொழியாகப் பேசுகிறார்கள்.
########
இவர்கள் அனைவரின் தாய்மொழியும் செம்மொழியான நம் தமிழே.
########
என் தந்தை கூறினார்: தமிழர்களில் நூற்றுக்கு தொண்ணூரு சதவீதம் பேர் பொருள் தெரியாத இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களையே பிள்ளைகளுக்கு வைக்கிறார்களாம். இதற்கு எனது வகுப்பே சான்று.
########
உன் பெயர் தமிழ்ப் 'பசி' -யா இல்லை வேற மொழிப் 'பசி'யா?
#########
தமிழ்ப் பசி இல்லீங்க ஐயா. இது ஃபின்லாந்து மொழியில் உள்ள பெயர்.
########
சரி இந்தப் பெயருக்கு என்ன பொருள்?
#######
ஐயா, என் தந்தையிடம் கேட்டு நாளை சொல்கிறேன். இணையத்தில் தேடினால் இந்தப் பெயரின் பொருள் கிடைக்கும் என்று ஒரு தடவை என் தந்தை கூறினார்.
@@@@@@@
நல்லது பசி. நீ உட்கார். மற்ற மாணவர்கள் அனைவரும் 'பசி' என்ற பெயருக்கு என்ன பொருள் என்று கண்டுபிடித்து ஒரு தாளில் எழுதி உங்கள் பெற்றோரின் கையொப்பம் பெற்று நாளை என்னிடம் தரவேண்டும். சரியான பொருளை எழுதிவரும் மாணவர்களுக்கு பரிசு தரப்படும். சரி இன்று பாடப் புத்தகத்தில் உள்ளபுரட்சிக் கவிஞர் எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்தைப் பற்றி விளக்குகிறேன். குறிப்பு எடுத்துக் கொண்டு நாளை ஒரு தாளில் அந்தப் பாடல் பற்றி ஒரு கட்டுரை எழுதி வரவேண்டும். (ஆசிரியர் தன் பணியைத் தொடருகிறார்).....
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Pasi = King. Finnish origin.

எழுதியவர் : மலர் (12-Nov-21, 10:44 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : en peyar pasi
பார்வை : 155

மேலே