தமிழும் தெய்வமும்
குறள் வெண்பா
தjமிழ்மொழி என்ப தமிழர் தொழுதவாம்
தெய்வ வரலாறே கேள்
தமிழில் எல்லா இலக்கியமும் கடவுள் பற்றியே பற்றி சார்ந்து நிற்கும். தமிழைப் புதுவுரைநடை யாக்கி பக்தியை ஒழித்துவிட கும்பல் கும்பலாக வந்து அழிக்கிறார்.!
தமிழ் தமிழர்கடவுளர் வாழ்வின் நெறி தமிழ்மரபு என எல்லாவற்றிலும் சைவம் உள்ளிருக்கும் தமிழ் மொழியாம்
ஆசிரியத் தாழிசை
எடுத்துக் காட்டு. 1. தனித்து வருதல்
வானுற. நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம். யா.கா மேற்கோள்
எடுத்துக்காட்டு. 2. மூன்றடுக்கி வருதல்
கன்று குநிலாக் கனியுகுந்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளோமோ தோழி
பாம்பு கயிறாக கடல்கடைந்த் மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆபலந் தீங்குழல் கேளோமோ தோழி
கொல்லையஞ் சா ரல் குருந்தொசித்த மாயவன்
எல்லிநம்ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளோமோ தோழி
பேசுதமிழ் என்றா நினைத்தாய் தமிழ்மணம்
வீசு தமிழடா கேள்