மழையும் மனனவியும்
இவையின்றி அமையாது வாழ்வு
அவை தரும் மகிழ்வு பல ...
இவை பொழியும் பொழிவு (சொற்பொழிவு , மழைபொழிவு)
பொலிவு தரும் தெளிவு வரும் உலகில்
இவற்றை மனதிலும் மதகு கொண்டும் தேக்கினால் கலங்கல் கொளும் .
மேலோட்டம் கொண்டு நீரில் அன்னம்
பால் பிரிப்பாற் போல் பிரித்திட வாழ்வு .
அன்றில் அதையே தங்க விட்டால் தந்திடும் கலங்கலும் கலக்கமும்
மனைவியும் மழையும் ஒன்றே...
பொழிகையில் சங்கடம் தரும்
பொழிந்தபின் மண் கொளும் வெள்ளம் ... உள்ளம் கொளும் வெல்லம் எனும் சுவை .
வாழ்க வையகம் வான்சிறப்பு எனும் மழையுடனும் ...
இல்சிறப்பு எனும் மனையாள் கொளும் சொல்லாடலுடனும்