ஐடி பணியாளன்
ஐ.டி. பணியாளன்
ஜன்னலின் வழியே
எட்டி பார்த்த
சூரியன்
தன் கரங்களை
நீட்டி அவனை
தட்டி எழுப்ப
முயற்சிக்க
சூடு பட்டதால்
உடலை
நெளித்து
மீண்டும் போர்வையை
இழுத்து போர்த்தி
அவன் உலகை
இருட்டாக்கி
தூங்குகிறான்
பகலை
பார்க்காமலே
பாதி வாழ்க்கையை
ஓட்டி விட்ட
இந்த
கணிணி பணியாளன்
வீட்டிலிருந்தே
வேலை
இரவு
பகலாகவும்
பகல்
இரவாகவும்
அவனுக்கு
மாறித்தான் போய்விட்டது