நேசம் மறந்த தேசம் இது

பிறந்ததும்
எவரும்
உடனடியாய்
ஆராய்வது
ஆணா
பெண்ணா
என்று !

வளர்ந்ததும்
கூறுவது
அவன் / அவள்
என்று.... !

சமூகம்
குறிப்பிடுவது
அவன் / அவள்
" இந்து "
" கிறித்தவர் "
" இஸ்லாமியர் "
என்று ....!

எல்லோரும்
மறப்பது
ஒன்றை ...
அனைவரின்
குருதியின்
நிறம் சிவப்பு
என்று ....!

ஆனால்
இறந்ததும்
பெயரிடுவது
"பிணம் "
என்று ... !

இடையில்
வருகிறது
சாதிகள்
மதங்கள் ...!
பிரிவினை
வாதங்கள்
எழுகிறது
இதனால்
எதற்காக ?

புதைப்பது
எரிப்பது
இடுகாடு
வெவ்வேறு !

ஆரம்பம் முதல்
இறுதி வரை
பாகுபாடு !
ஏன் இந்த
மாறுபாடு
வேறுபாடு ?
வேடிக்கையான உலகம் ...!

உள்ளவரை
பேசுவது
அனைவரும்
ஒன்றென !
மறைந்ததும்
கூறுவது
மதத்தால்
சாதியால்
வெவ்வேறென !

வெட்கமில்லா
பூமியிது !
நேசமில்லா
தேசம் இது !

கீதை
படிப்பவரும்
பைபிள்
போதிப்பவரும்
குரான்
வாசிப்பவரும்
யோசிப்பதில்லை
இதனை ....!

பிறப்பு முதல்
இறப்பு வரை
தொடர்கின்ற
அவலம் இது ..!

பணத்தை
பதவியை
மதிக்கும்
ஞாலம் இது !
மனிதனை
மனிதன்
அவமதிக்கும்
காலம் இது !


பழனிகுமார்
16.11.2021

எழுதியவர் : பழனி குமார் (16-Nov-21, 8:18 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 56

மேலே