முன்னே முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப் பிடிக்க பெரிதாய் விரைந்து – அறநெறிச்சாரம் 24

நேரிசை வெண்பா

முன்னே ஒருவன் முடித்தான்றன் துப்பெலாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல்? - முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து 24

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

தனக்கு முன்னே பிறனொருவன் தன் நுகர்பொருள் பலவற்றையும் அழித்துச் சென்றான்; அதனைப் பார்த்த அவன் அறத்தினைச் செய்யாமல் ஏளனஞ் செய்திருத்தல் என்ன பேதமை!

முன்னே பெரியோர்கள் செய்த வழியை யறிந்து மேலும் மேலும் மிக விரைந்து அறத்தினைச் செய்க

குறிப்பு:

முன்முன்: அடுக்குத் தொடர், விரைவுப் பொருள் கூறியது. .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-21, 11:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே