சுமப்பார்கள்
பழி, பாவத்திற்கு
பயந்து நடப்பவனை
கோழை என்று
குறை கூறும் மனிதர்கள்
படம் எடுத்து ஆடும்
பாம்பை அடித்துக் கொன்றவனை
பெரும் வீரனென
போற்றி கொண்டாடுவார்கள்
வல்லவன் வகுத்தது
விந்தையாக இருந்தாலும்
நீதி, நேர்மையை மதித்து
நடப்பவன் தான் மாவீரன்,
நடத்தை கெட்டு
நீதி, நேர்மை இல்லாமல்
அடுத்தவரை கெடுத்து
ஆதாயம் தேடுபவன் தான் கோழை
தான் மட்டும் வாழ
தீமைகள் பல புரியும் மனிதர்கள்
கேடு நினைப்பவர்கள்
கருணையில்லா தீயவர்கள்,
கையேந்தும் ஏழைகளை
காத்து அருளினால்-- உங்களை
உயிர் உள்ளவரை நெஞ்சில்