மழை
மழை
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
இரவிலும் உறங்காமல்
துறவியாய் தவமிருந்து
பிறவியில் மழையென
பெய்கிறாய் புவிமீது
எவரெவர் விரும்பினும் எவரெவர் வெறுப்பினும்
உறவுகளை ஒன்று சேர்த்து உலவுகிறாய் வீதியிலே
வெள்ளம் என்ற பெயரினிலே பள்ளம் நோக்கும் உன்பயணம்
நல்ல பயிர் விளைவித்து
நாடு காக்கும் நோக்கமென்றறியாமல்
சில அல்லக்கைகள் அவமதிக்கும்
அலப்பறைகள் சரிதானா ?
🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️