மழை
மழை
🌧️🌧️🌦️🌧️🌦️
கஞ்சனைப் போல் அஞ்சாமல்
மஞ்சனையில் இளம் மங்கைபோல்
வஞ்சனைகள் அறியாமல்
வந்து பெய்யும் சிறுமழையே
பெண்மை போல் மென்மையெனில்
பிடிக்கிறதோ உனக்கும்தான்
வளர்ந்து நிற்கும் செடிமீது
மலர்ந்த காதல் செயல்தானோ
நுனிதனை தொட்டுவிட்டு
நுழைந்து மெல்ல கீழ்நோக்கி
தண்டினை தழுவியபடி
தரைக்குள்ளே நுழைகின்றாய்
வேரினில் உட்புகுந்து
விளைச்சலை கொடுப்பதற்கு
செடியோடு உன் இல்லறமே
சிறப்பே தான் இப் புவிமேலே
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️⛈️⛈️