கடந்து விடவே நினைக்கிறேன் 3
இருந்தும் கடந்து விடவே நினைக்கிறேன்:
சமீபமாய் எத்தனை நாட்கள் நாம் ஒருவரை ஒருவர் கடந்திருப்போம்
தலைகவசமுடன் முககவசத்தோடு முண்டியடித்து இருசக்கர வாகனத்தில் நிதர்சனங்களும் பயணித்தப்படி யிருக்க
வழிகிடைக்கா மிதிவண்டியாய் ஒதுங்கி நின்று ஏக்க மூச்சு விட்டு கொண்டிருக்கிறது நமது பால்ய நினைவுகள்
சொல்லாமலே உணரும் உனது வருகையெல்லாம் மகாமகம் போல அரிதாகிப் போனது
பெயர் கேட்டதும் அனிச்சையாய் திரும்பும் கழுத்து சற்றே இறுக்கம் காட்ட ஆரம்பித்து இருக்கிறது
உனது வீடிருக்கும் வழியை இப்போதெல்லாம் கண்கள் கவனியாதிருக்க கற்றுக் கொண்டு விட்டன...
இதோ இந்த கூட்டத்தில் அந்த இளம்பச்சை வண்ண சட்டை அணிந்து செல்வது நீயாக கூட இருக்கலாம்
என்று நினைக்கும் மனத்திற்கு ஓங்கி ஒரு கொட்டு வைத்து சொல்கிறது அறிவு
வானில் கரைந்து போனது
எல்லாம் வானவில் மட்டுமல்ல என்று!
-மதிஒளி சரவணன்