உண்மையைச் சொன்னால்

பணமே வாழ்க்கையின்
அனைத்துக்கும் மூலம்.
பணம் சொந்தங்களை
இணைத்து வைக்கும்.
நண்பர்கள் சூழ்ந்திருக்க
விரோதிகளை தூரமாக்கும்.
செல்வாக்கு தேடிவரும்;
புகழ் மழை பொழியும்.
பதவிகள் நாடி வரும்.
பல சுகங்கள் கிடைக்கும்
பணத்தால் அதிகாரம் வரும்.
ஊருக்கு நன்மைகள் பல
செய்ய முடியும்,.
உறவுகளுக்கு வளமான
வழிகாட்ட முடியும். .
ஏழையர் வாழ்வில் சந்தோஷ
ஒளி கூட்ட முடியும்.
ஆணவம் இல்லாத பணமும்
ஆடம்பரம் காட்டாத பணமும்
மேலும் பணம் கொண்டுவரும்
.

பணம் உலகுக்கு உன்னை
அடையாளம் காட்டும்..
பணம் இருந்தால் வாழ்வின்
இலட்சியங்கள் நிறைவேறும்..
நற்குணம் சேர்ந்த பணம்
உலகின் சொர்க்கமாகும்.
பணம் கல்வி தரும்;
சந்ததியர்களுக்கு நல்ல
சுகமான வாழ்வு தரும்.
பணத்தால் வாழ்க்கையில்
வெற்றிகள் வரும்.
பிறந்தது வாழ்க்கையில்
சாதிக்கத்தான்.
பணம்தான் அதன் ஆதாரம்
பணம் சேர்ப்போம்;
பாடுபட்டு பணம் சேர்ப்போம்.
பணம் எல்லாம் தரும்.

எழுதியவர் : காந்தி ராஜா (22-Nov-21, 9:24 pm)
சேர்த்தது : GANDHI RAJA
பார்வை : 197

மேலே