கதிரவனும் நிலவும்
தீப்போல் கதிரொளியால் எரிக்கும் கதிரவன்
திக்கெல்லாம் கதிர்கள் பரப்பி இருளை
இல்லாமல் போக்குபவன் அவன் இல்லை எனில்
நீரில்லாது அவனி என்றோ அழிந்துவிட்டிருக்கும்
வினோதமானது இயற்கை தீப்போல் சுட்டெரிக்கும்
சூரிய ஒளிபெற்று வெண்ணிலவாய் தன்னொளி
பரப்பி வானில் வலம் வருகிறது பால்நிலா
காதலற்கும் கவிஞனுக்கும் கற்பனைப் பொருளாய்
அழியா நண்பனாய் காதலியாய் தூதுவனாய்
அன்றும் இன்றும் என்றும்