கவி அரசி

அவள் பேரழகி
அல்ல
அவள் பேரே அழகி

அவள் ஓராயிரம்
நயன்தாராவின்
ஈராயிரம் மீனாவின்
அழகினை ஒரே
உருவில் பெற்றவள்

நிலவிற்கு இவளுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
உலகத்தை சுற்றினால் அது நிலா
இந்த உலகமே சுற்றினால் அதுதான் என் கலா

இவளின் பல் லைக்
கண்டிருந்தால்
பல்கலைக்கழகம்
என்ற ஒன்றை கட்டி இருக்காது அரசு

அனைவரின் கூந்தலும் தலையை மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும்
இவளின் கூந்தல் மட்டும் தரையையும் தொட்டுக் கொண்டிருக்கும்

இவள் நிச்சயம் முயலுக்கும் மயிலுக்கும் தான் பிறந்திருக்க வேண்டும்

மேலோகத்தில்
இருபது வருடமாய்
தேவதைகள் எல்லாம் ஊர்வசியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்
இவள் நம் ஊரில் வசிப்பது தெரியாமல்

இவள் அம்மா படைத்த படைப்பல்ல
இவள் பிரம்மன் படைத்த படைப்பு அல்ல அம்மன் படைத்த படைப்பு

247 எழுத்துக்கள் தமிழில்
அதில் ஐந்து எழுத்துக்கள் மட்டும் மிகவும் இனிக்கிறது
அவளின் பெயர் வரும் எழுத்துக்கள்

எழுதியவர் : புதுவை குமார் (25-Nov-21, 12:26 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kavi arasi
பார்வை : 117

மேலே