தாய்

உதடொட்டா வெண்பா
=======================
ஊற்றாய் உதிர்ந்துருண் டோடித் தரைதனில்
சீற்றத் துடனே சிறிதேதன் னாற்றலைச்
சின்னச் செடிகொடிகள் சிற்றுயி ருய்தற்குத்
தன்னைத் தருநதி தாய்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Nov-21, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 76

மேலே