நீயே வாழ்க்கை
அந்தி மாலை சந்திப்பில்
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை தேடி
கரம் நீட்டி உன் கரம் பிடித்து
தொடர்கிறேன் என்
வாழ்க்கை பயணத்தை
உன் குறுநகையில் வீழ்ந்தபோதும்
குன்றாத காதலால் மலர்கிறேன்
குறைவாகவே நீ பேசினாலும்
குறையாத நேசத்தை தருகிறாய்
நீயில்லா தனிமையில்
உன் நினைவுகளைளே
சுற்றி வருகிறது உன்னில்
சரணடைந்த என் இதயம் 💓