படைத்தவன்

மானிடனே என்று உன்னால்
வரும் மழையை நிறுத்திட முடியுமோ
பாய்ந்துவரும் நதியின் வெள்ளத்தை தடுத்திடல் சாத்தியமோ
நிலநடுக்கம் மற்றும் வெடிக்கும் எரிமலையின்
தீவிரத்தைத் தடுத்திட முடியுமோ -அன்று
' நீ தன்னிச்சையாய் செயல் படுபவன்
என்பதை ஒப்புக்கொள்வேன்--- அதுவரை
படைத்தவன் ஒருவன் உள்ளான் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லாதவன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Nov-21, 6:08 pm)
Tanglish : padaitthavan
பார்வை : 104

மேலே