இனம் உயர்த்து

இனம் உயர்த்து!

இறைவன்
இனக்குழுக்களை
இயற்றினான்!

இனத்திற்கு இனம்
சிறப்பாக ஒன்றையும்
இல்லாத ஒன்றையும்
இட்டு வைத்தான்!

மனித இனம்
அதற்கெனத் தனி குணம்
ஆயுள் முழுக்க
தேடுவதோ தனம்!

பாடுபட்டு
தேடுவான் பணம்
வாழ்க்கையை வாழாமலே
ஆயிடுவான் பிணம்!

மற்ற உயிரினங்களுக்காக
உருக வேண்டும் மனம்!
உருகினால் மலர்போல்
ஊறும் புகழெனும் மணம்!

இனத்திற்கு
வேண்டும் உயர்வு
செய்யும் செயலே
எய்த வைக்கும்
மாண்புக்கு பெயர்வு!

சாம்பல்
நிறமொரு குட்டி
சாந்து
நிறமொரு குட்டி

எனினும் மனிதா
நாம் மனித இனம்
அறிவாலும்
அன்பாலும் உயர்ந்த
இனம்!

எல்லா உயிரும்
உன்னோடு வாழ
இடம் கொடு!

அவர்கள் படும்
துயரில் நீயும்
பங்கெடு!

சாதி மதம்
எனும் கண்ணாடி
அணியாதே!

கடவுளின்
கண் கொண்டு
கருணை பொழி!

வாழ்க்கை
பாதையில்
கணம் குறை!
வளர்ந்துகொண்டே
வரும் வசந்தமெனும் பிறை!

அறிவை
விருத்தியாக்கு
அழுகையை
அக்னிக்கு இரையாக்கு!

இயற்கையை
போற்றி ஒழுகு
இன்முகத்தில்
சிரிப்பைப் பழகு!

உயர்திணை
என்று உனக்கு பெயர்
பயிர்கள் கூட
மற்றவர்களுக்கு உணவாகும் பார்!

படித்த
உன்னால் பக்கத்தில்
உள்ளவர் ஏதாவது உண்டா?

எதையாவது செய்து
பார்
பூமி பூ பூக்கும்
வாழும் பொழுதெல்லாம்
புகழ் மணக்கும்!!

புஷ்பா குமார்

எழுதியவர் : புஷ்பா குமார் (28-Nov-21, 9:24 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : inam uyarthathu
பார்வை : 279

மேலே