அவளும் நானும்
கார்குழலாள் அவள் கூந்தலில் சூட்டிய
மல்லிகைப்பூ செண்டின் வாசம் என்மனதை
கிரங்கவைக்க அவள் விழிப்பார்வையின் கூரிய பாரவையோ என்மனதில் காதல் தந்துதைக்க
செவ்விய அவள் குமுத இதழோ மெல்லத்திறந்து
புன்னகைக்க அதுவே கொஞ்ச நேரத்தில்
முல்லைப்பூ உதிர்ந்ததுபோல் சிரிப்பாய் மாறி
திறந்த அவள் நாவிலிருந்து தேனென
தீந்தமிழ் மொழியிலே காதல் கீதம் இசைக்க
என்னை மறந்தேன் நான் என்னையே
அவள் எழுப்பிய காதலுக்கு காணிக்கையாய்
தந்து விட்டேன் காதலனாய்