ஒப்புக் கொள்ளுமா
இந்த உலகில்
அவளை விட அழகாய் ஆயிரம் இருக்கும் இருந்தென்ன செய்ய
ஒத்துக் கொள்ளுமா
ஒப்புக் கொள்ளுமா
இவன் மனம்
அவள் அவன் கண்ணுக்கு
எதிர்படும் போதெல்லாம்
அவன் மனம்
அல்லல் படும் பாடிருக்கே
அப்பப்பா அது பெரும் பாடு
அந்த நிமிடங்கள் எல்லாம்
அவனுக்குள் படிப்படியாக நொடியாகி பொடிப் பொடியாகும்
பகலிலும் நிலவைத் தேடுவான்
நட்சத்திரங்களிடம் நலம் விசாரிப்பான்
காற்றிடம் மணி கணக்கில் கதைகள் பேசுவான்
உலக அதிசயத்தை யெல்லாம்
ஒன்னு ஒன்னா அவள் அழகோடு ஒப்பிட்டு பார்த்து ஒழுங்கு படுத்திக் கொள்வான்.

