மண்ணுக்கே இரையாவான்
பூத்துக் குலுங்கும் மலர்களுக்கு
படைத்தவன் தந்து அருளியது
அழகும், மணமும்,--அவை
ஆவலைத் தூண்டி இழுக்கும்
பறக்கும் பூச்சி,வண்டுகள்
பூவில் வந்து அமரும்
சிறகை மூடும் பூச்சிகளின்
செயல் கண்டு பூக்களும்
இதழ்களை மூடும்—பூச்சிகள்
இரையாகிப் போகும்
இறைவன் அறிந்து செய்தானா
இல்லை அறியாமல் செய்தானா ?
மண்ணில் மனமும், அழகும்
மனிதர்களை மயங்க வைத்து
மானத்தை இழக்க வைக்கும்
மரணத்தையும் தந்து விடும் ,
பொன்னுக்கும், மண்ணுக்கும்
பெண்ணுக்கும் பேராசைபட்டவன்
முடிவில் மண்ணுக்கே இரையாவான்