கடவுளின் கணனி

கடவுளின் கணனி.

விதி என்பார்!
அவன் எழுதியது
என்பார்,
அப்படியாயின்?

அவனிடம் ஒரு
கணனி உண்டோ!
அது ஒரு QUANTUM
கணனியோ!

நம் பெயரும்
அதில் இருக்குமோ!
என்ன நடக்கணும்
என்று எழுதி
வைத்திடுவானோ!

புண்ணியம் பாவம்
செய்தால்-மாற்றி
எழுதிடுவானோ!

சந்தேகம்?
புத்தபிரானை
கேட்போம்!

அவன் பதில்?
நகைத்திடுவானோ!
மௌன விரதம் தான்
பிடித்திடுவானோ!

ஆக்கம்
சண்டியூர்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Dec-21, 8:06 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 75

மேலே