வேதனை
அன்றெல்லாம் என்னை ஏத்தி புகழ்ந்த
இந்த உந்தன் வாய்த்தானா இன்று
இன்று இப்படி என்னை வசைமாரியால்
தூற்றுகிறது காலில் முள்குத்தினால் முல்லை
எடுத்துவிடலாம் வீசி எரிந்து விடலாம்
காயம் ஆறி வேதனையும் குறைய
உன்வார்த்தைகள் முள்ளாய்க் குத்தியது என்
இதயத்தை முல்லை எடுக்கவும் முடியவில்லை
வீசி எறியவும் முடியலையே ஆராப்
புண்ணால் வேதனையில் துடிக்கும் என்னுள்ளம்
யாரிடம் சொல்வேன் என்செய்ய