மரணத்தை வென்றவர்கள்

தேசத்தின் பாதுகாவலர்களை
மரணம் அழைத்துக் கொண்டது.
அந்த ஒரு நிமிடம் வராமலேயே
இருந்திருக்கக் கூடாதா..?
உங்கள் மரணத்தின் பின்
மரணம் ஒரு மகா கொடியது
என்பதை உணர முடிகிறது.
தேசத்துடன் இருந்து நீங்கள்
எத்தனையோ சாதித்தீர்கள்
இன்னும் எத்தனையோ
சாதிக்க வேண்டியிருக்கும்போது
ஏன் மரணத்துடன் போய்விட்டீர்கள் ?
மரணமே உனக்கு மரணம் வராதா ?

மீண்டும் பிறந்து வாருங்கள்;
உங்களுக்காக காத்திருக்கிறோம்.
உங்கள் கனவுகளை இலட்சியங்களை
உறுதியுடன் வெற்றியுடன் முடிக்க
உங்கள் படைகள் தயாராக இருக்கின்றன.
என்றுமே நீங்கள் பாரத தளபதிகள்தான் .

உங்களுக்கு வணக்கங்கள்.
நீங்கள் பாரதம் பெற்ற மாவீரர்கள்.
மாவீரர்களுக்கு மரணமில்லை
எங்கள் மனங்களில் இருந்து
நீங்கள் என்றும் மறைவதில்லை. .

எழுதியவர் : காந்தி ராஜா (10-Dec-21, 8:23 pm)
சேர்த்தது : GANDHI RAJA
பார்வை : 173

மேலே