தனிமை
அவளும் நானும் காதலாராய்த் திரிந்து
ஒட்டி உறவாடிய நாட்கள் அவை
மண்ணும் மண்ணின் ஈரமுமாய் என்று
ஏனோ என்னுள் வந்த சந்தேகம்
அவள் பிரிந்து போனால் என்னைவிட்டு
இன்று பிரிவின் துயரம் என்னை வாட்ட
தனிமையில் நான் வாடுகின்றேன் இங்கு
ஈரமில்லா விரிசல் விட்ட மண்ணைப்போல
ஈரம் மீண்டும் வந்து சேருமோ எம்மை
சேர்த்துவைக்க மீண்டும் ஈர மண்போல்
நாங்கள் ஒட்டி உறவாட