கலங்காதே மனமே கலங்காதே
கலங்காத மனிதன் இல்லை;
கண்ணீர் சிந்தாத ஜீவன் இல்லை;
கைகல் வரையாமல் ஓவியம் இல்லை;
கற்கள் எல்லாம் சிலையாவதில்லை;
கரங்கள் நீட்டாமல்
தானம் இல்லை;
கவலையை துடைக்காமல்,
மன அமைதி பிறப்பதில்லை;
தெளிந்த ஓடையும் கலங்காது இருப்பதில்லை.
தெளிந்த மனதில் கணம் இல்லை;
வழிந்த அருவியும்
வடியாது இருப்பதில்லை;
வழிந்த கண்ணீரும்
விழியில் காயாமல் இருப்பதில்லை;
வலையில் விழுந்த மீன்
துள்ளாமல் இருப்பதில்லை;
வறுமையில் விழுந்தவன்
துடிக்காமல் இருப்பதில்லை.
இரத்தம் இல்லாமல்
உயிர் இல்லை;
இரக்கம் இல்லாமல் கருணையில்லை;
ரகசியம் இல்லாமல்
அந்தரங்கம் இல்லை;
ரசிக்கத்தெரியாமல்
வாழ்வில்லை.
அவசியம் இல்லாமல் காரணம் இல்லை;
அதிசயம் இல்லாமல்
ஆச்சரியம் இல்லை.
பாசம் இல்லாமல் உறவில்லை;
பாசை இல்லாமல்
தேசம் இல்லை.
தேசம் இல்லாமல்
குடி உரிமை இல்லை;
வாசம் இல்லாமல்,
சுவை இல்லை;
வேசம் இல்லாமல்,
நாடகம் இல்லை;
மோசம் இல்லாமல்
நாசம் இல்லை;
வசனம் இல்லாமல் கதையில்லை;
வசம் இல்லாமல்,
உடமை இல்லை;
விசம் இல்லாமல் நச்சில்லை;
விஷயம் இல்லாமல் வாந்தி இல்லை;
வாசகம் இல்லாமல்,
இல்லம் இல்லை;
வாசகர் இல்லாமல்,
எழுத்தில்லை;
வாசல் இல்லாமல் வீடில்லை;
சப்தம் இல்லாமல் சங்கீதம் இல்லை;
சுத்தம் இல்லாமல்
நோய் விடுவதில்லை;
சுருண்டு கிடந்தால் உணவில்லை;
சுரண்டல் இல்லாமல்
வர்க்க போராட்டம் இல்லை;
சுருட்டாத அலைகள்,
கடலில் இல்லை;
சுருட்டாமல், அரசில் இல்லை;
சுத்தம் இல்லாமல், தூய்மை இல்லை;
சுற்றித்திரியாத காற்று இல்லை;
சூறாவளி சுழட்டி போடாமல் இருப்பதில்லை;
சொட்டாமல் அன்பில்லை;
கொட்டாமல் மழையில்லை.
சுழட்டாத வால் இல்லை;
சுழலாமல் பூமி இல்லை;
சுமக்காத துயரில் சோகம் இல்லை;
சுரக்காத அன்பில் கருணை இல்லை.
யுத்தங்கள் நடக்காத பூமியில்,
புத்தனுக்கு வேலை இல்லை.
பிழையில்லாமல் திருத்தம் இல்லை;
பிழைப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை;
பிடிவாதம் பிடித்தவன்,
படிவதில்லை.
பிழைப்பில்லாதவனுக்கு உணவில்லை;
பிள்ளைகள் இல்லாத இல்லத்தில்,
பேய் கூட குடியிருப்பதில்லை.
பிடிவாதம் பிடிப்பவனிடம்,
வாதம் தேவையில்லை;
படியாத மனத்தில்
பாசம் வடிவதில்லை.
சுழட்டாத வாலில்,
இரத்தம் சொட்டுவதில்லை;
கழட்டாத ஆடையில்,
வாடை அடிக்காமல் இருப்பதில்லை;
சுடாத நெருப்பில்,
சமையல் ஆவதில்லை;
சுவைக்காத உணவை,
விரும்புவார் யாரும் இல்லை;
சேலையில்லாமல் அழகில்லை;
சேனையில்லாமல் படை இல்லை;
வேலை இல்லாமல் உழைப்பில்லை;
வேதனை இல்லாமல்
துவக்கம் இல்லை;
வெள்ளாமை இல்லாத நிலம்,
தரம் கெட்டு போகாமல் இருப்பதில்லை;
வேலா வேலைக்கு உண்டே
உறங்குபவன்,
குண்டனாகாமல் இருப்பதில்லை;
வெள்ளை அடிக்காத வீடு,
குடியிருக்க பயன் படுவதில்லை.
வேதனை சுமக்காமல்
விடுவதில்லை;
வெயில் காயாமல் போவதில்லை.
சாலையில் ஓடாத வாகனங்கள் இல்லை;
சோலைகள் இல்லாமல் வனங்கள் இல்லை;
வேலை இல்லாதவனுக்கு
உணவில்லை;
சாண் இல்லாமல் முழம் இல்லை
சாட்டை அடி சவுக்கடி இல்லாமல்,
மாடு சண்டித்தனத்தை விடுவதில்லை;
ஜாதி இல்லை என்றால்,
மதம் என்ற பேதம் இல்லை;
ஜாடிக்கு ஏத்த
மூடியில்லாமல் மூடுவதில்லை;
ஜாடை இல்லாமல், காதல் இல்லை;
ஜாதி மல்லி பூத்து
மணக்காமல் இருப்பதில்லை;
ஜன்னல் இல்லாத வீட்டில்
காற்றில்லை;
ஜனங்கள் இல்லாமல், ஜனநாயகம் இல்லை;
ஜென்ம விரோதியும்,
நண்பனாகாமல் இருப்பதில்லை.
அ. முத்துவேழப்பன்