கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால்
பக்கம் 15

மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அபில்லோ மருத்துவமனை. டாக்டர் சரவணன் அவசரமாக அழைக்கப்பட்டார். காரணம் மருத்துவமனையில் தொழிலதிபர் ரங்கா விபத்து காரணமாக அனுமதிக்கபட்டர்.மூத்த மருத்துவர் என்ற முறையில் டாக்டர் சரவணன் அவசரமாக அழைப்பு விட்டு இருந்தது மருத்துவமனை நிர்வாகம். ரங்காவிற்கு எல்லாவிதமான முதற்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் சிறிதளவு மயக்கம் ஏற்பட்டு இருந்தது அதனை மருத்துவர்கள் சரி செய்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஊடகங்களும் அரசியல் பெரும் புள்ளிகளும் அபில்லோ மருத்துவமனையில் முற்றுகையிட்டுக் கொண்டுருந்தனர். ஊடகத்தில் மிகப்பெரும் பேசுபொருளாக ரங்கா கார் விபத்து பற்றி பேசப்பட்டு கொண்டிருந்தது. பெரிய அளவில் அரசியல்வாதிகளும் குவிந்திருந்தன காரணம் ரங்காவின் பண பலம் மிக வலிமையானது என்பதை எல்லோரும் அறிவார்கள் அதைவிட ரங்காவால் தான் பலர் இப்போது பதவிகளிலும் இருக்கிறார்கள் அதனால் தங்கள் விசுவாசத்தை காட்டுவதற்காக மருத்துவமனை முன் நின்று கொண்டிருந்தனர்.
பாதுகாவலர்கள் படை சூழ வள்ளியின் கார் மருத்துவமனையை அடைந்தது அவசரமாக மிகுந்த சோகத்துடன் உள்ளே சென்றால் வள்ளி மருத்துவமனையில் ரங்கா இருந்த கோலத்தைப் பார்த்து விட்டு ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் கதறி அழுதாள் வள்ளி. வள்ளியின் தோழி கலா சமாதான படுத்தினாள்.

" அப்பா என்ன ஆச்சு? " என்று கண்ணீர் மல்க பள்ளி கேட்க ..

" ஒன்றும் இல்லை அம்மா! எல்லாம் சரியாகிவிட்டது நீ கவலை கொள்ளாதே! தயவுசெய்து நீ அழாதே உன் கண்ணில் கண்ணீரை பார்த்தால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை "என்று சொல்ல ரங்கா சொல்ல
தன் மனதை தைரியப்படுத்திக் கொண்டு அழுவதை நிறுத்திவிட்டு தந்தையின் பக்கம் அமர்ந்தாள் வள்ளி.

ரங்காவை சுற்றிலும் பாதுகாவலர்கள் இருந்தார்கள் அவர்கள் பார்த்து குரலை உயர்த்தி இத்தனை பேர் இருந்தும் அப்பாவின் காரை ஆக்சிடென்டாக ஆக விட்டிர்களா? என கடிந்து கொண்டாள். நடந்தது எதிர்பாராமல் நடந்துவிட்டது நாங்கள் உடனே இங்கே கூட்டிக்கொண்டு வந்து விட்டோம் இனிமேல் பாதுகாப்பையும் சற்று அதிகரிக்கிறோம் என காவலர் ஒருவர் சொல்ல வள்ளியின் மனம் சமாதானம் அடையவில்லை கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளை ஆறுதல் படுத்தினார் ரங்கா "பயப்படாதே ஒன்றும் ஆகாது" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே ரங்காவின் மேனேஜர் " அய்யா உங்களைப் பார்க்க முதலமைச்சர் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல சரி வரட்டும் என்று சொல்லிவிட்டு பாதுகாவலர்களை நாற்காலிகளை தயார் செய்யுமாறு உத்தரவிடுகிறார் ரங்கா.

பாதுகாவலர்கள் இருக்கைகளை தயார் செய்து விட்டு வெளியே செல்கிறார்கள். முதலமைச்சர் உள்ளே வருகிறார்.

வாங்க முதல்வரே!! வாங்க முதல்வரே!! என ரங்கா அழைக்க...

" தலைவரை நான் என்றும் உங்கள் தொண்டன் தான். நான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தொலைக்காட்சியில் இந்த செய்தி கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இது நிச்சயம் ஏதாவது சதியாக தான் இருக்கும் . அப்படி ஏதும் இருந்தால் காவல்துறை கண்டுபிடித்துவிடுவார்கள். தலைவரே என்ன தான் நான் வேறு கட்சியில் இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் எனது வாழ்க்கையை ஆரம்பித்து வைத்ததே நீங்கள்தான் தலைவரே அதனால் என்றும் உங்கள் தொண்டன் தான் நான். நிச்சயம் உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் எனது அரசு செய்து தரும் தலைவரே கவலைப்படாதீர்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று முதல்வர் சொல்ல


அதெல்லாம் வேணாம் எல்லாத்தையும் ஏன் ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அப்புறம் கட்சிகள் எல்லாம் எப்படி போகுது என்று ரங்கா கேட்க

"எல்லாம் நல்லா போகுது தலைவரே எலக்சன்ல வரப்போகுது அதனால கொஞ்சம் பணம் தட்டுப்பாடு அதிகம் ஆகுது. நீங்க வேற கட்சி ஆரம்பித்து விட்டீர்கள். இனி உங்ககிட்ட கேட்க முடியாது என தாழ்ந்த குரலில் முதல்வர் பேச

இந்த மாதிரி பேசாத.. பார்ப்போம்.. நான் சொல்றேன் நேரம் வரும்போது நீயும் எங்க கட்சிக்கு வந்துரு என்று ரங்கா சொல்ல
"கண்டிப்பாக தலைவரை என்றும் நான் உங்கள் தொண்டன் என்று நான் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன். தலைவரே எனக்கு என்னமோ இந்த எதிர்க் கட்சிக் காரங்க மேல தான் கொஞ்சம் சந்தேகம் இருக்கு. நீங்க கட்சி ஆரம்பிச்ச தனாலே அவர்கள் ஏதேனும் சதிகளையும் செய்திருப்பார்களோ என்று எனக்கு தோன்றுகிறது. நான் உளவு துறையில் சொல்லி இருக்கிறேன் அறிக்கை வந்தவுடன் உங்களுக்கு அனுப்புகிறேன் தலைவரே. உடம்பை கவனித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு .மருத்துவர்களை அழைக்கிறார் முதல்வர்.

டாக்டர் சரவணன் மற்றும் அவரது குழுவினர் முதல்வரிடம் ரங்காவின் உடல்நிலை பற்றி விவரிக்கிறார்கள். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை சிறிதளவு காயம் தான் அது விரைவில் சரியாகி விடும் என்று மருத்துவ குழுவினர் சொல்ல..

புன்னகையுடன் முதல்வர் அய்யா சரியாகினால் போதும். நல்லபடியாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு

"தலைவரை கிளம்பட்டுமா உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று முதல்வர் கேட்க

"சரி போய்ட்டு வாருங்கள்" என்று ரங்கா  சொல்ல முதல்வர் கிளம்புகிறார்.


ரங்காவின் மேனேஜர் " அய்யா உங்களைப் பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் வந்திருக்கிறார்" என்று சொல்ல

" சரி வரச்சொல்" என்று ரங்கா கூற அவரும் அவரது எம்எல்ஏக்களும் உள்ளே வருகிறார்கள்.

" அய்யா நல்லா இருக்கீங்களா? உடம்பு பரவாயில்லையா?... தொலைக்காட்சியில் செய்தி கேட்டதும் மிகவும் கவலை கொண்டேன் எனக்கு என்னமோ இது விபத்து மாதிரி தெரியவில்லை. இது ஏதோ திட்டமிட்ட சதி போல் தெரிகிறது
ஆளும் கட்சிக்காரர்கள் நீங்கள் கட்சி ஆரம்பிப்பது பிடிக்காமல் ஏதோ சதி வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது. நீங்க இன்னும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. தேர்தல் முடியும் வரை உங்களுக்கு பாதுகாப்பு கொஞ்சம் அதிகரித்து கொள்ளுங்கள். பாதுகாப்பு விஷயங்களில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நாங்கள் உதவி செய்கிறோம் நீங்கள் எங்கள் கட்சிக்கு எவ்வளவு செஞ்சிருக்கீங்க அதனால் எந்த உதவினாலும் செய்கிறோம் தயங்காமல் கேளுங்கள் " என்று எதிர்க்கட்சி கட்சி தலைவர் கேட்க

பரவாயில்லை இருக்கட்டும் நான் பார்த்து கொள்கிறேன் எல்லாவற்றையும் என்று ரங்கா சொல்ல ..

எதிர்க்கட்சித் தலைவரும் மருத்துவர்களிடம் ரங்காவின் உடல்நிலையை விசாரித்து விட்டு வெளியே கிளம்புகிறார்.

டாக்டர் சரவணன் தொலைபேசியை எடுத்து ரித்திக்கை அழைக்கிறார்.

"என் ரூமுக்கு என் ரூமுக்கு வா" என்று சொல்ல வருகிறேன் டாக்டர் என்று சொல்லிவிட்டு தனது அறையில் இருந்து டாக்டர் சரவணன் அறைக்கு கிளம்பினான் ரித்திக்  .


" வா ரித்திக் .. உட்காரு.. இந்த இந்த பைலை கொஞ்சம் பாரு.. இது தொழிலதிபர் ரங்கா வோட பைலை .
அவரை கவனித்துக் கொள்ள 5 பேர் கொண்ட மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளது அது கூட அவர்களோடு நீயும் சேர்ந்து கொள்.. பயிற்சி எடுத்துக் கொள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள் எல்லா மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து தெரிந்துகொள் இதுவும் ஒரு பிராக்டிகல் எக்ஸாம் மாதிரி உனக்கு" என்று டாக்டர் சரவணன் சொல்ல

" சரி டாக்டர் ..நான் கவனித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பையில் எடுத்துக் கொண்டு தனது அறைக்கு செல்ல முயல்கிறான் ரித்திக்..  

" ஒரு நிமிஷம் ரித்திக் அறை எண் 210 ரங்கா இருக்கிறார். இதோ இந்த ஐடி கார்டை எடுத்துக் கொள்.. மொத்தம் ஆறு பேர் மட்டுமே அந்த அறைக்கு செல்ல முடியும் . பாதுகாவலர்கள் இந்த ஐடி கார்டை கேட்பார்கள் கவனமாக வைத்துக் கொள் என்று டாக்டர் சரவணன் சொல்ல

"சரி டாக்டர் நான் பார்த்து கொள்கிறேன் "

" இப்போதுவரைக்கு எல்லாம் ரிப்போர்ட் அங்கே குறித்திருப்பார்கள் நீ ஒரு முறை பார்த்துவிட்டு உனது அறைக்கு போ " டாக்டர் சரவணன் சொல்ல ..

" சரி டாக்டர்.. நான் செக் பண்ணி விட்டு செல்கிறேன்" என்று டாக்டர் சரவணன் இருந்து விடைபெறுகிறான் ரித்திக் .

" அரசியல்வாதிகளை நம்ப முடியாது எப்போது வேண்டுமானாலும் எதுவும் செய்வார்கள். இதுவரை நடக்காத விபத்து இப்போது நடக்கிறது என்றால் நான் கட்சி ஆரம்பித்ததை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? நிச்சயம் இதில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நாம் கவனமாக இருப்பதை விட நம் மகளையும் மிகக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு தனது மகளை முதல்வர் வேட்ப்பாளர் இருந்து நிக்கி விட்டு நாமே களம் இறங்கினால்தான் சரி வரும் அது தான் வள்ளிக்கும் நல்லது ..சரி நேரம் வரும்பொழுது மகளிடம் மெதுவாக பேசி புரிய வைத்துவிடலாம் இப்போது பேசினால் ஆசை காட்டி மோசம் செய்து விட்டோம் என்று வரும் ... நேரம் வரும்போது பொறுமையாகப் பேசி விடலாம் என முடிவு செய்தார்" ரங்கா

கதவு திறக்கப்பட்டது உள்ளே வருகிறான் ரித்திக் .. ரங்கா அருகில் அமர்ந்திருந்த வள்ளி ரித்திக்கை பார்த்ததும் எழுந்து நிற்கிறார்.
" மேடம் நீங்க கொஞ்சம் இந்த பக்கம் வாருங்கள் " என்று கூறிவிட்டு ரங்காவின் அருகில் இருந்த மற்ற ரிப்போர்ட் எல்லாம் ரித்திக் பார்த்துக் கொண்டிருக்க

அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள் வள்ளி . அந்த முதல் பார்வை சில நிமிடம் என்றாலும் ,அவளை ஏதோ செய்தது. கண்கள் சந்தித்துக் கொண்ட அந்த சந்திப்பை தவிர அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்தது.. ஆம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி..

கண்கள் திறக்கும்
பக்கம் 16 ஆக....
பொ.சசி குமார்
19 /12 /2021

எழுதியவர் : சசி குமார் (19-Dec-21, 2:53 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 648

மேலே