விடத்தேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
முளையைவரு விக்கின்ற மூலரோ கத்தை
யளையுமுதி ரத்தை யடங்கா - துளைதாக
வேகத்தைப் போக்கிவிடும் வெய்யவிடத் தேர்சக்)கிர
வாகத்தைக் காய்முலையாய் வாழ்த்து
- பதார்த்த குண சிந்தாமணி
முளையையே வருவிக்கும் மூலநோய், வயிற்றுவலி, ரத்த கிராணி, தாகம் இவற்றை விடத்தேர் போக்கும்