கவிதை என் பாடு, புரிந்தால் பண் பாடு

சாதாரண மனிதர்கள் தினமும் தேடுவது பணம், படம், உணவு
அசாதாரண மனிதர்களுக்கு சாதிக்கவேண்டும் என்பதே கனவு
பலரின் ஆசை வகைவகையான ஆடைகள் வாங்கி அணிவது
சிலரின் ஆவல், உயர்ந்த மனித நேயத்தை சொல்ல துணிவது
உணவும் உடையும் கிடைத்த பின் ஒருவன் வேண்டுவது வீடு
தேவைக்கு உணவு உடை ஒதுங்க இடம், இது சிலர் கணிப்பீடு
உற்றார் நண்பர்கள் போதும் அதுவே இன்பம் என்பவர் அதிகம்
வாடும் ஏழைக்கு உதவு அதுவே மெய்யன்பு, இது சிலர் ஐதீகம்
அதிகம்பேருக்கு தன்கடமையை செய்து வாழ்ந்தாலே போதும்
பிறர் கடமை செய்ய அவர்க்கு உதவுபவர்கள் சிலர் எப்போதும்
திறமையால் பொருள் ஈட்டிட நினைப்பதுவே சராசரி எண்ணம்
பலர் கவலையை மறக்க நிறைகிறது சிலர் கற்பனை கிண்ணம்
பணம் புகழ் தேடித்தான் பலரது வாழ்க்கை பயணம் நடக்கிறது
அளவான ஆசை மனஅமைதி சிலர் குறிக்கோளாக இருக்கிறது
கடவுளை கோயிலில் மட்டுமே காண்பவர்கள் 99 % விழுக்காடு
மனதில் உறையும் ஆத்மாவே கடவுள் என 1%னரின் கோட்பாடு
என்னை பொறுத்தவரை எல்லோரிடத்திலும் உண்டு பாகுபாடு
வேறுபாடு உணவில் மட்டும் என நினைப்பது உயர்ந்த பண்பாடு

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Dec-21, 12:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 81

மேலே