அன்பு இல்லையெனில் இல்லை பண்பு
திருவள்ளுவர் பிறந்து குறளில் நல்வாங்கு வாழ்வை அருளினார் 
ஒவையார் பிறப்பெடுத்து மனித பண்பின் சிறப்பினை நிறுவினார் 
வள்ளலார் தோன்றி அன்பில் கலந்து கருணையாகவே வாழ்ந்தார்    
மாணிக்கவாசகர் உழன்று இறைவனின் கருணைக்காக ஏங்கினார்  
ரமணர் மணம் செய்யாமல் ஆத்ம சிந்தனையில் மனம் லயித்தார்
பரமஹம்சர்  மனைவியுடன் கடவுளை கண்டு துதித்து உருகினார்  
சைதன்யர் கீதை தந்த கண்ணனை ஆடிப்பாடி தோத்திரம் செய்தார்  
இன்னும் எவ்வளவோ ஞானிகள் இவ்வுலகுக்கு சேவை செய்தனர் 
பொருளை பின்னே தள்ளி அருளை முன் தள்ளி முன்னடைந்தனர்
பெரும்பான்மையினர் விஞ்ஞானம் தான் மெய் என நம்புகின்றனர்  
எவரும் எதை வேண்டுமானாலும் நம்பட்டும் நம்பாமலிருக்கட்டும் 
ஒன்றைமட்டும் ஒவ்வொரு மனிதனும் நன்கு புரிந்துகொள்ளட்டும் 
சுயநலம் இல்லாத கரை படியாத தூய அன்புதான் உண்மை வாழ்வு 
இதை உணராத ஒரு செல்வந்தரின் வாழ்வும் உண்மையில் தாழ்வு       
ஆனந்த ராம்

