அறிவுடன் தடு
அறிவுடன் தடு
===============
வாழும்வ ரையினில் நீயே – உனை
வாகாய்செ திக்கிடு வாயே – பல
வராலாறுக லுருவாகிட
வழியாயிரு விழியாயிரு
வடிவாய் ஒரு முடிவாய்
**
பாழுங்கி ணறுள தாமே – வையம்
பார்த்துந டந்திட லாமே – ஒரு
பழிபாவமு மறியாதவர்
பலியாடென மலிவானதை
படிப்பாய் உயிர் துடிப்பாய்
**
சூழுமி டரத னாலே – ஒரு
சோகம்த ழுவுவ தாலே – தினம்
சுதிமாறிய இசையாகிய
சுகவாழ்வது சுடராகிடச்
சொலிப்பாய் கண் விழிப்பாய்
**
ஆழுந்து யரறுப் பாயே – அதன்
ஆழம்பு ரிந்திடு வாயே – பெரும்
அனலாடிடும் புழுவாவதை
அறிவோடுடன் தடுத்தேவிடு
அறமாய் புது வரமாய்
**
*மெய்யன் நடராஜ்