கதிரவனாய் எழு

கதிராவனாய் எழு
==================
மலரெனவே இதழ்விரித்து
மணம்பரப்ப வென்று – இன்று
மலர்ந்தப்புத் தாண்டு – தரும்
மகிழ்ச்சிகளைத் தீண்டு – ஒரு
மலைபோலுள துயர்நீங்கிட
மடுவாகிடு மீண்டு
**
புலர்ந்திடவே காத்திருந்தப்
புதுச்சோலை பூவும் – ஒரு
பூமழையைத் தூவும் – அதில்
புரையோடிய யாவும் - இனி
புரண்டோடிடு மெனவேயிளம்
பூங்குயிலும் கூவும்
**
நடந்ததெலாம் நினைத்திருந்து
நடுங்குவதை விட்டு – இனி
நடப்பவற்றைத் தொட்டு – பொது
நலக்கொடியைக் கட்டு – அது
நலமாடிடுந் திசைப்பூத்திடும்
நமக்கோரேழில் மொட்டு
**
கடந்ததெலாம் கடந்ததுதான்
கவலைகளை மாற்று – நம்
கையிலில்லா நேற்று – கண்
கண்டிடாதக் காற்று – இனி
கதிரவனைப் போலெழுந்துக்
காரியங்கள் ஆற்று -
**
*இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்,
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Jan-22, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 121

மேலே