மகிழ்ச்சியின் தேடலில் மர்மம்

அத்தியாயம்:1

2022 புத்தாண்டிற்கு இன்னும் 12 மணி நேரமே இருக்கும் நிலையில் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருத்தி திண்டுக்கல் குற்றப்பிரிவு காவல் நிலையம் ஆய்வாளர் அலுவலகத்தின் முன்னர் அமர்ந்து இருந்தால் பார்ப்பதற்கு ஒரு மருத்துவரை போல காட்சியளித்தாள் அவள் முகமும் சற்று கோபமும் மற்றும் பதட்டமாகவும் காட்சியளித்தது. காவல் நிலைய அலுவலர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்களை அனுமதித்து கொண்டு இருந்தனர் அப்பெண்ணின் முறையும் வந்தது அவளிடம் விவரங்கள் கேட்கப்பட்டது அவளின் பெயர் நஸீமா என்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிவதாகவும் என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார் எனவும் தனக்கு நியாயம் வேண்டி ஆய்வாளர் அவர்களை சந்திக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தால் இவ் அணைத்து விபரங்களும் ஆய்வாளர் அவர்களின் மேஜையின் மேல் வைக்கப்பட்டது ஆய்வாளர் திரு சிக்கந்தர் முஹம்மது இதனை பார்த்தவுடன் சத்தமிட்டு சிரித்துவிட்டார், பின்னர் புதிதாக பனி மாற்றம் செய்து வந்துதிருந்த PC செந்தில் யை அழைத்து அந்த பெண்ணை உள்ள வர சொல்லுய்யா என்றார், சரிங்க ஐயா என்று கூறி மேடம் ஐயா உள்ள கூப்புடுறார் என்றார் கண்களில் அனல் கொப்பளிக்க உள்ளே சென்றார் பெண்ணை பார்த்ததும் உக்காருங்கள் என்ன விஷயமாக வந்திங்க என்று கேட்டார் சிக்கந்தர் மிகுந்த வேகத்துடன் அமர்ந்த நஸீமா ஆய்வாளரை முறைத்து பார்த்து கொண்டுயிருந்தார் இதனை பார்த்தும் பார்க்கதமாறு அமர்ந்திருந்தார் சிக்கந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் PC செந்தில் ஏம்மா அய்யாவை ஏன் இப்படி முறச்சுக்கிட்டு இருக்க விஷயத்தை சொல்லு என்று அதட்டினார் மீண்டும் சிரித்த ஆய்வாளர் சிக்கந்தர் யோவ் செந்தில் மேடம் க்கு தான்யா என்ன முறைக்க அதட்ட எல்லாம் உரிமையும் உண்டு என்னால அவங்கள இதெல்லாம் செய்ய முடியாது என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஏதும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் செந்தில் அந்த நேரத்தில் உள்ளே வந்த ஏட்டு பெருமாள் அம்மா எப்போ வந்திங்க நல்ல இருக்கிங்களா பாப்பா நல்ல இருக்க என்று நலம் விசாரித்தார் ம்ம் நல்ல இருக்கேன் அண்ணா என்று பதில் கூறினார் நஸீமா. ஏட்டு நம்ம செந்தில் அம்மாகிட்ட எல்லா விவரத்தை வாங்கிட்டு நல்ல விசாரிச்சுட்டு ஒரு நல்ல போலீஸ்காரன வேலை பாத்து இருக்கார் ஓஹ் அதன் அம்மா இவ்வளோ சூட இருக்காங்களா சரிங்க ஐயா டி சொல்லட்டா உங்களுக்கும் அம்மாக்கும் என்று கூறிக்கொண்டே ஏட்டு பெருமாள் PC செந்திலை வெளியே அழைச்சுட்டு கிளம்பினானார். சார் யாரு அந்த அம்மா நம்ம ஐயாவை இப்படி முறைக்குது ஐயாவும் பேசாம இருக்காரு ஒண்ணுமே புரியல என்று செந்தில் தலையை சொரிந்தார் யோவ் செந்தில் அவங்க தான்யா நம்ம இன்ஸ்பெக்டர் ஐயாவோட வீட்டுக்காரம்மா ரெண்டு பெரும் சொந்தக்காரங்க அப்பறம் ஒண்ணா படுச்சு காதல் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க வேற நம்ம வீட்ல பாத்து கட்டி வச்ச பொண்ணுங்களே நம்மள லெப்ட் ரைட் வாங்கும் போது நஸீமா அம்மா சொல்லவா வேணும் சரிவிடு ஆனா ரெண்டு பெரும் ரொம்ப தங்கமானவங்கயா எல்லதுக்கிட்டையும் அன்ப நியாமா இருப்பாங்க இவ்வளோ ஏன் என் பொண்ணு நாகலட்சுமி பிரசவத்தை நஸீமா அம்மா தான் பாத்தாங்க பிரைவட்ல ஒரு லச்சம் கேட்டாங்க ஆபரேஷன் பண்ண ஆனா நம்ம அம்மா சுக பிரசவமாவே குழந்தையை எடுத்து நல்ல பாத்துக்கிட்டாங்க அதே மாதிரி தான் நம்ம ஐயாவும் கஷ்டம்னு வரவங்களுக்கு அவர் முடுஞ்ச அளவுக்கு உதவி செய்வார் மனுசன் இது வரைக்கும் சம்பளத்தை தவிர ஏதும் கைல வாங்குனது இல்லை இப்படி சில பெரு இருக்குறனாள தான் அரங்கத்துக்கு இன்னமும் மக்கள்ட நல்ல பெரு இருக்கு என்று சொல்லிக்கிட்டே இரண்டு டி அய்யாக்கு கொண்டு போய் குடு இப்போ இல்ல ஒரு இருபது நிமிஷம் கழிச்சு போ உள்ள ஒரு காரசார விவாதம் போயிட்டு இருக்குனு சிரிச்சுட்டே கடையில உக்காந்தார் பெருமாள்.

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (3-Jan-22, 1:20 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 198

மேலே