பொங்கல் சிறப்பு மடல்

சங்கராந்தி பண்டிகை மற்ற ஏனைய பண்டிகைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது .ஒரு கடவுளையோ தேவதையையோ வழிபடும் நிகழிச்சிகளாகத்தான் பல்வேறு பண்டிகைகள் அமைகிறது. தீபாவளி , நவராத்திரி, ராமநவமி , கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையர் சதுர்த்தி இப்படி கூறிக்கொண்டே போகலாம். ஆனால் தை பிறந்த இந்நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மிகவும் வித்தியாசமானது. இன்று நாம் இயற்கையின் என்றென்றும் ராஜாவாக விளங்குகின்ற சூரியனுக்கு நம் நன்றியை சொல்லி , நாம் தினம் உயிர் வாழ காரணமாக இருக்கும் கதிரவனுக்கு பூசை செய்து, சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் படைத்து மகிழ்கிறோம். அதே நேரத்தில் இன்று நம் தோழர்களான உழவர்கள், குடியானவர்கள், விவசாயிகள் இவர்களுக்கு நம் நன்றியறிதலை இந்த பண்டிகையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.நிலத்தை செவ்வனே உழுது, சமம் செய்து, பொறுமையுடன் நாற்று நட்டு, நேரத்தில் நீர் பாய்த்து, பயிர் வாடிவிடாமலும் பூச்சி அரிக்காமல் இருக்க தேவையான உரமும் மருந்தும் இட்டு, பின்னர் நாற்று நட்டு, களை பறித்து அறுவடை செய்து , பயிர் செய்த அரிசி கோதுமை மற்றும் இதர தானியங்களை மற்றும் பல்வேறு காய்கறிகள், கனிகளை பெரிய சிறிய நகரங்களில் வாழும் நமக்கு கிடைக்க வழி செய்யும் மாபெரும் பணியை செய்கின்ற இந்த மக்களின் உழைப்பையும், கடமை உணர்வினையும் நாம் நன்றியுடன் இப்பண்டிகையின் மூலம் தெரிவிக்கிறோம். இன்று இவர்கள் பொங்கல் பானையை சூரியனுக்கு கீழாக மண் அடுப்பில் வைத்து, பால் பொங்கி பின்னர் பொங்கல் செய்து தம் நன்றியை சூரியனுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.
இவையவையும் நீங்கள் நன்கு அறிந்ததே. இருப்பினும் என் எண்ணங்களின் என் எழுத்துக்களின் வாயிலாக இந்த பொங்கல் மடலை வரைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இந்த நன்னாளில் நீங்கள் அனைவரும் ,குறிப்பாக நம் விவசாய நண்பர்கள், சீரும் சிறப்புடன் எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்திட வாழ்த்தும்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Jan-22, 6:06 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 309

சிறந்த கட்டுரைகள்

மேலே