மாடு எனும் மாசெல்வம்

மாடு அதை நாடு ...நாடாதவர் யார் தேடு இப்பூவுலகில் அப்படி ஒருவர்?

இளமையில் பெறும் கல்விச்செல்வம்
கல்லாதவர் பெறும் செவிச்செல்வம்

ஆன்மீகத்தில் வேள்விச்செல்வம்
நாத்திகத்தில் பகுத்தறிச்செல்வம்

ஆணிடம் துணிவு எனும் செல்வம்
பெண்ணிடம் பண்பு எனும் செல்வம்

குழந்தையிடம் அன்பே செல்வம்
வளர்ந்தபின் அறிவே செல்வம்

வசதியில் சௌகரியம் செல்வம்
அசதியில் அசௌகரியமும் செல்வம்

பதவியில் அதிகாரம் எனும் செல்வம்
உதவியில் உள்ளம் எனும் செல்வம்

களிப்பில் மகிழ்ச்சி எனும் செல்வம்
தவிப்பில் தயவு எனும் செல்வம்

மா என்றால் செல்வம் எனும் நம்தமிழே அமுது எனும் பெரும் செல்வம்

அதனால் தான் மாடு என பெயர் வைத்தான் விவசாயி மாட்டிற்கு...

மாடு இருந்தால் மகிழ்ச்சி... என்றும் வாராது தளர்ச்சி ...

உழவுக்கும் 🐮 மாடு
பொதிக்கும் 🐮 மாடு
பாலுக்கும் 🐮 மாடு
தயிருக்கும் 🐮 மாடு
மோருக்கும் 🐮 மாடு
நெய்யுக்கும் 🐮 மாடு
வெண்ணெய்க்கும் 🐮 மாடு
எண்ணெய் அரைக்க வும் (செக்கு) 🐮
அன்புக்கும் 🐮 மாடு
அதட்டலுக்கும் 🐮 மாடு
பணிவாக பசு எனும்🐮 மாடு
துணிவாக காளை எனும் 🐮 மாடு
உறுதிக்கும் 🐮 மாடு
உழைப்பிற்கும் 🐮 மாடு
உரத்திற்கும் சாணம் தர 🐮 மாடு
கோமியம் எனும் கிருமிநாசினி தர 🐮
கதிர் அடிக்க 🐮 மாடு
ஜல்லிக்கட்டு எனும் மல்லுக்கட்ட 🐮

மாடு எனும் மகத்துவத்தை எழுதிட
போதாது ஏடு ...

மாடு எனும் மட்டற்ற செல்வம் மக்கள் அனைவருக்கும் கிடைத்திட இறைவன் அருள் கிடைக்கட்டும்

மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்

எழுதியவர் : பாளை பாண்டி (15-Jan-22, 2:40 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 150

மேலே