கீரைத்தண்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தண்டுமெத்த வாய்வு தணியாத சீதளமாம்
விண்டுரைக்கில் சின்னோய்போம் விள்ளவோ - கொண்டக்கால்
நீர்க்கடுப்பு வெட்டையனல் நில்லாது நேரிழையே
போர்க்கடுப்பி ரத்தமும் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

வாதமும் நீர்ப்பிடிப்புக் குணமும் கொண்ட கீரைத்தண்டு நீர்க் கடுப்பு, வெட்டை, இரத்தபேதி, பிரமேகச்சூடு போன்ற சில நோய்களைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-22, 8:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே