குடியரசு
மக்களுக்காக மக்களால் மக்களே நடத்தும்
நீதியால் இயங்கும் நல்லாட்சியே குடியரசகும்
இது நிலையாய் நீடித்து இருக்க
குடிமக்கள் நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம்
ஆட்சிசெய்ய நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி
கல்வி பண்பு மனசாட்சி சத்தியம் ஆகிய
இவற்றால் உயர்ந்தவனாக இருத்தல் வேண்டும்
ஆதலால் உயர்ந்தோரை ஆட்சியில் அமர்த்திட
குடிமக்களாகிய நாம் கடமைப் பட்டுள்ளோம்
'தேர்தல்' குடியரசின் முதுகெலும்பு
'வாக்களித்தால்' ஒவ்வோர் குடியின்
'ஆன்மீகப் பொறுப்பு'....ஆக தேர்தலை
லேசாக எண்ணுதல் கூடாது...நல்லோரை
ஆட்சியில் அதனால் அமர்த்திடவேண்டும் நாம்
ஒவ்வோர் குடிமகனும் வாக்களிப்பை
இரைப்பு பொறுப்பாய் நினைத்திடல் வேண்டும்
வாழ்க ஜனநாயகம்....வாழ்க குடியரசு