அழிப்பு படிப்பு

. அழிப்பு படிப்பு.
👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓
உலகமெங்கும் கொரோனாக்கென்று போடப்பட்ட தடுப்பினால்
உண்மையிலே மாணவனின் கல்விநிலை பொதிர்ப்புதான்...

அழகழகாய் புவியின்மீது தோன்றுகின்ற பலியங்கள்
அழியும் கல்வி மீளாவிட்டால் அனைத்துமிங்கே பலிகடாதான்...

படிறுதாண்டி தப்பிப்பிழைக்க உதவுகின்ற கல்வியோ
கொடிது இந்த தொற்றைச்சொல்லி கொள்ளைபோக விட்டுட்டோம்...

அரசு நமக்கு சமழ்ப்புசொல்லி ஆவதொன்றுமில்லையே
முரசுகொட்டி மூடுவிழாவோ மூன்று முறை பள்ளிக்கு...

கனற்பில் சொருகும் விறகுபோல கல்வியிங்கு ஆனதே
கடந்து போன காலமெல்லாம் எரிந்து மீந்த சாம்பலே...

குடம்பைக்குள்ளே முடங்கிவிட்ட சிறகு முளைத்த பறவைகள்
உடம்பை வளர்த்து நின்றாலும் உண்மையங்கு முடமன்றோ...

அத்தினி போலே சொத்துக்கள் குவிந்து கிடப்பினும்
அழியாமல் வாழ அவனுக்குத் தேவை கல்வியே...

மதுவின் மீது செலுத்தும் கவனம் அரசுக்கு
மதிலை படிப்பில் இல்லாததுண்மையில் வருத்தமே...

அனைத்து வைத்த தகழி போல ஆகிவிட்ட பள்ளியை
கொளுத்தி வைக்க எவனுக்குமே கொஞ்சம்கூட தோனலை...

ஆயம் கூட்ட வேண்டாமென்று அறிவுரைகள் சொன்னதனால்
ஓயாத உறக்கத்தில் உறங்குவது பள்ளியே...

அரிதாக நிகழ்ந்துவந்த அரில் செயல்கள் நாட்டினில்
பெரிதாக நிகழுமுன்னே பிள்ளைகளைக் காத்திடில்...

உடுபதியும் வளர்பிறையில் ஒளிகொடுத்து மிளிர்ந்திடும்
படுகுழியில் விழுந்துவிட்ட பசங்கநிலை கவலையே...

🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖

எழுதியவர் : க.செல்வராசு (31-Jan-22, 2:24 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 36

மேலே