மாற்றமா ஏமாற்றமா
"இளமை அது அளித்த துணிச்சல்,
இதயத்தில் உதித்தது உறவின்
அற்புத விளைச்சல்.
துளிர்த்தது, தழைத்தது, களையாய் மாற
எதிர்ப்பில் எழுந்தது புகைச்சல்,
விழலுக்கு நீர் ஊற்ற அன்று அலைந்த அலைச்சல்,
மிஞ்சியதோ இன்று கண்ணீரின்
எரிச்சல்,
ஏமாற்றத்தின் உளைச்சல்,
இன்னும் எதற்கு அப்பாழாய் போன ஆசையின் இரைச்சல்?
விலக்கி விடு, ஒழிந்து போகட்டும்
ஆழ்மனத்தின் அடைசல்."