புண்ணியம் தேடி

" ஆசை அணைப்பறியா
பிஞ்சுகளை தூக்கி ,
மாசறியா விழிகளின்
கண்ணீரை நீக்கி,

ஆரா துயர்தனை போக்கி,
தீரா நல்லன்பு தந்து காத்திடுவோம்
அவர்களை நம்மில் ஒருவர் ஆக்கி,

யாராவது அறியாமல் பேசினாலும்
அவர்களையும் ஊக்கி,
நிலை பெயராத அன்பு கொண்டு அவர்களையும் சேர்த்திடுவோம்
வெளிச்சத்தை நோக்கி,

அது போதும் !
ஏழெழு ஜென்மத்திற்கும்
சேர்த்து விடுவோம்,
புண்ணியத்தை தேக்கி. "

எழுதியவர் : (8-Feb-22, 7:28 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : punniyam thedi
பார்வை : 57

மேலே