வாழ்வது ஒருமுறை காதலில் வாழ்வோம்
காதல் என்பது கானல் நீரோ !
வானில் திரியும் விண்மீன் திரளோ !
சாதலின் பின்னும் வாழும் உறவோ !
மாதவி கண்ணகி மாறா நினைவோ !
நிலவின் குளிரொளி நித்தமும் துயரோ
உலகினில் தங்கிட உறைவிடம் இலவோ !
தென்றலும் முகத்தினில் தீயெனத் தீண்டுமோ !
மன்றத்தின் மறுப்புரை மனதினைச் சீண்டுமோ !
காதலி இல்லா வாழ்வினில் சாரமோ!
ஏதுமே இலையெனில் ஏனிந்த வீரமோ !
வாழ்வது ஒருமுறை வாழ்ந்திடு வோமே!
வீழ்வதே விதியெனில் நின்மடி வீழ்வேனே !
-யாதுமறியான்.