காதலின் நினைவுகள்

தீண்டலின் விளைவினில்
தீப்பொறி!
சீண்டலின் விளைவினில் சிரிப்பொலி!
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை!
அகத்திலும் புறத்திலும் விழும்கணை!

காணா வினைகளின்
தாளா விளைவுகள்!
ஏனோ நெஞ்சினில்
நீங்கா நினைவுகள்!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (9-Feb-22, 8:43 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 206

மேலே