உனை நான் மறப்பதிஎல்லை தினம்

கார் கண்ட தோகைமயில் போல் தேகம் எல்லாம் சிலிர்க்குதடி .. பாவை

நின் பார்வை பதிந்த யென்மனதும்
மேகம் இல்லா மழையாக பொழியுதடி

கவிதைதனையே அருவியாக ...உன்
அழகினையே உருவாக கொண்டு

மின்னல்வெட்டு பார்வையில் என்நாணம் எங்கிருந்தே வந்ததடி

கன்னக்குழி அழகினில் என்கண் கொள்ளை கொண்டே போனதடி

சிரித்த சிரிப்பினில் சிறகின்றி பறக்குதடி யென்சிந்தை நித்தமும்

மொத்தமும் உனை அள்ளிக்கொள்ள
தோணுதடி மிச்ச சொச்சமில்லாமல்

காஞ்சி பட்டு உடுத்தி யென்தோளிலில் நீசாய்ந்து நின்றிடினும் தேய்ந்து தான் போகாதடி உன் அழகு

வாஞ்சையாக வஞ்சிநீ வகைவகையாக தரிசனம் தந்தாலும்
ஓய்ஞ்சிதான் போவதில்லை யென்மனம்...

உனை நான் மறப்பதில்லை தினம்
அதை அறியாதோ உன் மனம் ..

இன்னும் ஏனடி மெளனம்... இதில் தான் காணாதேடி நிறம் ...

திறம் தான் பெரிது பணம் தான் சிறியது .. குணம் தான் கோபுரம்

கொள்வோம் காதல் தினம்தினம்
கொண்டவளே எனை கண்டவளே

வந்துவிடு யென்வாசல் தேடி ..உந்தன் உறவுகளின் உயிர்ப்பான
நம்பிக்கையான எனை நாடி...

எழுதியவர் : பாளை பாண்டி, (9-Feb-22, 8:16 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 183

மேலே