படைப்பின் விசித்திரம்

படைப்பின் விசித்திரம்
===================
மலரும் கொடியில்
உதிரும் பூ
வாழ்க்கையின் தத்துவம்
*
மகிழும் மனத்தில்
துயரும் இருக்கும்
அடைவாய் பக்குவம்
*
ஓடும் நதிக்கு
கடலின் நடுவே
கிடைக்கும் அடைக்கலம்
*
ஓடும் வாழ்வில்
தடுக்கி விழுந்தால்
நமக்கோ உயிர்ப்பயம்
*
புலர்ந்தால் மடியும்
பனியின் துளிக்கோ
வாழ்க்கைப் பூக்களம்
*
பிறந்தால் மடியும்
வரையில் நமக்கோ
வாழ்க்கைப் போர்க்களம்.
*
அஃறிணையான
உயிர்கள் கொண்ட
வாழ்வோ உயர்தரம்
*
உயர்திணையான
மனிதர்கள் எமது
வாழ்வோ கீழ்த்தரம்
*
இருப்பதைக் கொண்டு
சிறப்புடன் வாழும்
இயற்கையில் யாவும்
இறைவன் அதிசயம்
*
இருப்பதை விட்டுப்
பறந்திட நினைக்கும்
மனிதர்கள் நாமவன்
படைப்பின் விசித்திரம்
*
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Feb-22, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 96

மேலே