உந்தன் கண்ணின் எழில்
உன் கண்களின் எழிலுக்கு இணையேதடி
கண்ணே இங்கும் அங்கும் களிநடம்
புரியும் உண்கண் கயல்போல் என்றால்
காதளவு நீண்டிருக்கும் உன்கண்கள்
கெண்டையடி பெண்ணே இன்னும் விளக்கிட
இன்னும் இயற்கையைத் தான் நாடுகின்றேன்
இன்னும் எழுதுவேன் எழுதிக்கொண்டே இருப்பேன்
உந்தன் நயங்கள் பேசும் எழிலை